இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். அந்நாட்டின் கோஷி மாகாணத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேபாளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். கோஷி மாகாணத்தில் இலாம் மாவட்டத்தில் 7 பேர், மன்சிபங் மாவட்டத்தில் 5 பேர், கோசங் மாவட்டத்தில் 6 பேர் என மொத்தம் 18 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதேவேளை, கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் கவனமாக இருக்க அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>