நேபாளம் – சீனா எல்லையில் கனமழை, வெள்ளம்; 9 பேர் மரணம்

Share

நேபாளம் – சீனா எல்லையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இரு நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள ரசுவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நேபாளம் – சீனாவை இணைக்கு நட்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வெள்ளப்பெருக்கில் நேபாளத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 பேர் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 57 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வெள்ளத்தில் மாயமான எஞ்சியோரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>