ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மைதுகுரி நகரில் உள்ள மசூதியில் நேற்று மாலை நேர தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர், உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்காத நிலையில், அந்நாட்டு காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>