நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

Share

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அளித்த பேட்டியில் கூறியதாவது: நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நோபல் பரிசுக்கு நான் டிரம்ப் பெயரை பரிந்துரைப்பேன். ரஷியா-உக்ரைன் இடையேயான போரை டிரம்பால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்தால் அவரை பாராட்டுவேன். உக்ரைனை அதன் பிரதேசத்தை ரஷியாவிடம் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலையில் வைக்காமல் அந்த போரை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தால் டிரம்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வேன். ஒரு போர் நிறுத்தம் இருக்க வேண்டும். ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் எந்தப் பிரதேசப் பரிமாற்றமும் இருக்க கூடாது. இதை புதினுக்கு தெளிவுபடுத்த அலாஸ்கா உச்சிமாநாடு ஒரு வாய்ப்பாக டிரம்புக்கு இருக்கலாம்.

போரை அவர் முடிவுக்கு கொண்டு வர இதுவே சரியான தருணம். அங்கு ஒரு குண்டு வீசும் சத்தம் கூட கேட்கக்கூடாது. போர் விவகாரத்தில் புதினுக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடைத்துவிடக்கூடாது என்பதே எனது குறிக்கோள் என்றார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>