பு.கஜிந்தன்
யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் விழுந்த நபர் ஒருவர் 20ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மரணத்தைத் தழுவிய சின்னத்துரை ராஜ்வதனன் நோர்வேயில் வசித்து வந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று காலை சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்றவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார். பின்னர் கிணற்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>