பகத் பாசில் நடித்துள்ள “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது

Share

பகத் பாசில் நடித்துள்ள “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தில் பகத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். மாயாஜாலம் கலந்த பேன்டசி கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் பகத் பாசில் மேஜிக் கலைஞராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருவருக்கும் இடையிலான சுவாரஸ்யமான பயணத்தை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட் நடிகர் சவுரப் சக்தேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘புஷ்பா’ படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார். தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாக உள்ளது. முதலில் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>