பக்தர் புடைசூழ நயினை நாகபூசணி அம்மன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது!

Share

பு.கஜிந்தன்

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்திருவிழாவின் கொடியேற்றத் திருவிழா, வியாழக்கிழமையன்று 26ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது.

நாகபூசணி அம்மனுக்கு ஈழத்தில் காணப்படும் முக்கிய ஆலயம் இதுவாகும். அன்றையதினம் அம்பாளின் கொடியேற்றம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் நாக பாம்பு ஆலயத்தின் முன்புறத்தே வந்து படமெடுத்தபடி பக்தர்களுக்கு காட்சியளித்தது.

குறித்த ஆலயத்தின் கொடியேற்றத்திற்கு புலம்பெயர் தமிழர்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் வருகை தந்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>