பசுமை இயக்கத்தின் மேதினப் பொதுக்கூட்டம் கொக்குவில் அறிவாலய மண்டபத்தில்

Share

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் இன்று புதன் கிழமை (01.05.2024 ) பிற்பகல் 4.00 மணிக்கு, கொக்குவில் பொற்பதி வீதியில் அமைந்துள்ள பொற்பதி அறிவாலய மண்டபத்தில் (பொற்பதிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில்) நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த உலகத் தொழிலாளர் தினப் பொதுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சமூக அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மேதினத்தைச் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பே உழைப்புக்கான உத்தரவாதம்’ என்ற கருப்பொருளில் செம்பசுமை மேதினமாகக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>