பஞ்சாயத்து ராஜ் தினம்.. ராகுல் காந்தி வாழ்த்து

Share

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்.24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 1992-ம் ஆண்டு இயற்றப்பட்ட 73-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 1993-ம் ஆண்டு ஏப்.24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததை குறிப்பதற்காக கொண்டாடப்படுகின்றது. முதல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 2010-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மகாத்மா காந்தியின் ‘கிராம தன்னிறைவு திட்ட’ கனவை நிறைவேற்றுவதில் பஞ்சாயத்து ராஜ் ஒரு உறுதியான அடிதளத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் அனைத்து கிராமத்தையும் நாட்டின் மைய நீரோட்டத்தில் இணைப்பதன் மூலம் அதற்கு அதிகாரம் அளித்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. மேலும் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் உரிமையை உறுதி செய்தார். பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மூலம் மக்கள் பங்களிப்புக்கும் உத்தரவாதம் அளித்தார். பெண்களின் அதிகாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தது பஞ்சாயத்து ராஜ். மேலும் 1993ம் ஆண்டு 73வது அரசியலமைப்பு சட்டத்திருத்தமானது, பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. இன்று இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்திய அரசியலில் பெண்கள் தலைமை தாங்கவும், அரசியலில் பங்களிப்பை வழங்கவும் பஞ்சாயத்து ராஜ் திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பினை அமைத்து கொடுத்தது. இந்த பஞ்சாயத்து ராஜ் தினத்தில் நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>