‘படையப்பா’ படம் மறுவெளியீடு – புதிய முன்னோட்டம் வெளியீடு

Share

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘படையப்பா’ திரைப்படம் மறு வெளியீடாகும் நிலையில் புதிய முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த ‘படையப்பா’ படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது, இந்தப் படம் வரும் 12ம் தேதியில் மறு வெளியீடாகிறது. ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக ‘படையப்பா’ படம் திரைக்கு வருகிறது . ‘படையப்பா’ திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மறு-வெளியீடு செய்யப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>