“படையப்பா 2” குறித்து ரஜினி கொடுத்த பதிவேற்றம்

Share

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த ‘படையப்பா’ படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்தப் படம் வரும் 12ம் தேதியில் மறு வெளியீடு ஆகிறது. ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக ‘படையப்பா’ படம் திரைக்கு வருகிறது . ‘படையப்பா’ திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மறு-வெளியீடு செய்யப்படுகிறது. இந்நிலையில், ‘படையப்பா’ குறித்து ரஜினி , “முதல்பாகத்திலேயே நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. 2.0, ஜெயிலர் 2 எல்லாம் வந்த நேரத்தில், ஏன் ‘படையப்பா 2’ செய்யக்கூடாது என்ற எண்ணம் எனக்கு வந்தது. அடுத்த ஜென்மத்தில் உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று நீலாம்பரி கூறுவார். நீலாம்பரி என்ற டைட்டிலில் ‘படையப்பா’ 2ம் பாகத்தை எடுக்க கதையை திட்டமிட்டு வருகிறோம். எல்லாம் சரியாக அமைந்தால், படம் நிச்சயமாக வரும். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்” என்றார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>