யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை , உயரப்புலம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய கும்பல் வழி மறித்து , சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருந்தது.
சம்பவத்தில் காயமடைந்த சாரதி , சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் , தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மானிப்பாய், கல்வியங்காடு மற்றும் மணியந்தோட்டம் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>