பத்தாவது ஆண்டு நினைவஞ்சலி | செல்வி டனித்தா விக்கினேஸ்வரபாலன் (கொக்குவில்-தலையாழி)

Share

ஈழத்தில் கொக்குவில் தலையாழி. வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுறோவை வசிப்பிடமாகவும் கொண்டு ஸ்காபுறோ பல்கலைக் கழகத்தில் (UofT 4th Year) பயின்றுகொண்டிருந்தவமான எமது அன்புச் செல்வி டனித்தா விக்கினேஸ்வரபாலன் அவர்களது
பத்தாவது ஆண்டு நினைவஞ்சலி.

உமை நாம் இழந்து பத்தாவது ஆண்டு கடக்கின்றபோதிலும்
எம் பதைப்பு இன்னும் அடங்கவில்லை அம்மா டனித்தா
கண் இமைக்கும் நேரத்தில் உமைக் காவு கொண்டான் காலன்
கதறியே அழுதோம் காலங்கள் கடந்தாலும் எம் சோகம் ஆறாது
எண்ணியே இருந்தோம் நாமும் நீயும் இம் மண்ணில் இன்பமாய்
எந்நாளும் வாழ்வோம் என்று ஆனால் நீ இல்லா உலகம் இருளே
எந்நாளும் எம்மோடு கூட வருவது கொடிதான நிசப்தம் தான்
உமை வளர்ப்பதிலும் உம்மோடு வாழ்வதிலும் இணையே இல்லாமல்
உம் பணிகள் தொடர கல்வியிலும் கடமையிலும் கண்ணாகி நின்றீர்
எதிர்பாரா இழப்பு அனைவரையும் வீழ்த்தியது விதி என்று சொல்லி
உம் இழப்பை ஏற்று மறந்து வாழ எம் இதயங்கள் மறுக்கின்றன
என்றும் உமக்காய் காத்திருப்போம் என்றோ ஒரு நாள் அருகில் வர…

இங்ஙனம்,
உந்தன் பிரிவால் இன்னும் வாடும் அப்பா, அம்மா,
அண்ணா , அண்ணி , மருமக்கள், தம்பிமார்
மற்றும் உறவினர்கள், நண்பர்கள்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>