பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் அலுவலகப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல்

Share

ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி இலங்கையின் நீதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச்சுக்கும் இடையிலான சந்திப்பு 3ம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பணிகள் என்பன உள்ளடங்கலாக சட்ட ஆட்சி சார்ந்த மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்டோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>