பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான காணொளியை தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. காணொளியில், சிவகார்த்திகேயன் பின்னணி குரல் பணியில் ஈடுபட்டுள்ளதையும், படத்தின் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் 1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘பராசக்தி’ படத்தின் பின்னணி குரல் பணிகளை தொடங்கினார் சிவகார்த்திகேயன்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>