இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந்தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், பராசக்தி படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்தின் முதல் பாடல் குறித்த பதிவேற்றம் கொடுத்துள்ளார். அதாவது, பராசக்தி படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
’பராசக்தி’ படத்தின் முதல் பாடல் – ஜி.வி.பிரகாஷ் பதிவேற்றம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>