பசங்க’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், “வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா” என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது. இவர் தற்போது ‘பரிமளா & கோ’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜியார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்திற்கான பின்னணி பணிகளை நடிகர் ஜெயராம், மிஷ்கின், சாண்டி, யோகி உள்ளிட்டோர் நிறைவு செய்துள்ளனர். அதற்கான காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது, மேலும் படம் விரைவில் வெளியாகும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
‘பரிமளா & கோ’ படத்தின் பின்னணி பணியை நிறைவு செய்த படக்குழு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>