‘பல்சுவை தமிழர் விழா’வாக இடம்பெற்ற கனடா உதயன் பத்திரிகையின் 29 ஆவது ஆண்டு நிறைவு விழா

Share

கனடா உதயன் பத்திரிகையின் 29 ஆவது ஆண்டு பல்சுவை கலை விழா டிசம்பர் 13ம் திகதி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. விழா குத்துவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

கனடா கீதம். தமிழ்த் தாய் வாழ்த்துடன் அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது.

வரவேற்பு நடனம் வர்ணிகா துவாரகன் அவர்களால் ஆடப்பெற்றது.

பிரதம விருந்தினராக தமிழ்மாமணி உலகசாதனையாளர் திரு கந்தசாமி உயிரவன் அவர்கள் மொன்றியலில் இருந்து விழா ஏற்பாட்டாளர்களால் அழைக்கப்பெற்றிருந்தார்.

விழா நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர்கள் மதிசயன் மற்றும் சாலினி பிள்ளை ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

அனைத்துலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர் “நிமால் விநாயகமூர்த்தி” அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

உதயனில் லோகேந்திரலிங்கம் அவர்களின் “கடின உழைப்புடன் சரியான தகவல் தெளிவாக நம்பகரமான செய்திகளையும் கட்டுரைகளையும் அவர் வாசகர்களுக்கு தந்து வருகின்றார் என்று தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.

அடுத்து சந்தியாராகம் நிகழ்வில் முதல் இடத்தைப் பெற்ற “குகா சோமசுந்தரம்” அவர்கள், பிள்ளையார் சுழி போட்டு பாடலை அருமையாகப் பாடினார்.

அடுத்து அழைக்கப்பெற்ற அகணி சுரேஸ் அவர்கள்தனது வாழ்த்துரையில் லோகேந்திரலிங்கம் அவர்கள் பல ஊடகங்களின் ஆதரவாளர் படைப்பாளி மற்று மு; உலக நாடுகள் முழுவதும் பயணித்து, தமிழ்ப்பணி ஆற்றுபவர், இவருக்கு உறுதுணையாக இவர் மனைவி பத்மலோசனி, மற்றும் அவர் குழந்தைகள் ஆகியோர் பக்க பலமாக இருந்து இந்த பத்திரிமை வெளிவர உதவுகின்றனர். மலேசியாவில் “நாவன்மை” என்னும் நிகழ்வை நிகழ்த்துகிறார்” என வாழ்த்தினார்.

நடன ஆசிரியை தயாளினி … அவர்களின் மாணவி சாதனா விழங்கிய …நடனம் மிகவும் அருமையாக இருந்தது.

அடுத்து அழைக்கப்பெற்ற வரசித்தி விநாய ஆலய முதன்மைக் குருக்களான விஜய குமாரக் குருக்கள் அவர்கள் தன் வாழ்த்துரையில் இந்தியா இலங்கை மலேசியா கம்போடியா என உலக நாடுகள் எங்கும் சுற்றித் திரிந்து உதயன் பத்திரிகையின் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் தமிழ்ப்பணி ஆற்றுகிறார் என வாழ்த்தினார்.

ரொறன்ரோ நகர சபை உறுப்பினர் நீதன் சாண் வாழ்த்துரையில் “அச்சு ஊடகங்கள் முன்பு மாதிரி இல்லை என்ற நிலை இருந்தாலும் என்றாலும் தன் முயற்சியால் லோகேந்திரலிங்கம் அவர்கள் ஒவ்வொரு வாரமும் தன் கடின உழைப்புடன் இந்த பத்திரிகையைத் தருகிறார்” என்றார்.
அடுத்து “புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கல்வி” எனும் தலைப்பில் அருமையான தூய தமிழில் உரையாற்றினார் அனுஸ் சுதாகரன். மூத்த மொழியான தமிழை தம் வீட்டில் பேசாதிருப்பதை எண்ணும்போது நா கூசுகிறது என்றும் எம் மக்களை சாடினார்..

பிரதம விருந்தினராக தமிழ்மாமணி உலகசாதனையாளர் திரு கந்தசாமி உயிரவன் அவர்கள் தனக்குரிய பாராட்டுக்களை மேடையில் பெற்ற பின்னர் ஆற்றிய தனது உரையில்
“இரணடு விடயங்கள் நான் கூறுவேன் கனடா உதயனுக்கு நாலு வயதாக இருக்கும் போது அதன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் என்னுடன் பழகத்தொடங்கி இன்று 29ம் ஆண்டு விழாவில் என்னை இவ்விழாவுக்கு அழைத்ததில் பெருமையடைகிறேன். நான் கனடா 2004ல் மொன்றியலில் “தமிழ்ச்சுடர்” விருது பெற்றதை ஒரு பக்கம் நிறைய எழுதினார். அவர் இங்குள்ளாரா? மொன்றியலில் உள்ளாரா? இலங்கையிலா? கம்போடியாவிலா என அறிய இயலாத அளவுக்கு வேகமாகச் சென்று செயலாற்றுவார். கனடா உதயன் என்பது சரியான பெயராகும். ரொரோன்றொ மொன்றியல், ஒட்டாவா கோண்வோல் என உதயன் பத்திரிகை எங்கும் விரிந்து பறக்கின்றது என்றார்.

கனடா என்றதும், மதிப்புக்குரிய பாலசுந்தரம் மதிப்புக்குரியகுரு அரவிந்தன் அகணி சுரேஸ், புட்பா கிறிட்டி என கனடாவை நினைவு படுத்துபவர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றும் உவகையுடன் தெரிவித்தார் . உலகம் முழுவதும் தமிழ் பேசத்தெரியாத தமிழர்கள் இருப்பது போல், கனடாவில் அந்த நிலை வரக்கூடாது எனவும், தமிழர்கள் வடஎழுத்துக்களை நீக்கினால் தான் சுயமாக நாங்கள் வாழ்வோம் எனவும் கூறினார்.

இதனை அடுத்து ஒரு அருமையான நடனம் நடந்தேறியது. சக்தி நர்த்தனாலயா நடனப் பள்ளியின் நிறுவனரும் குருவுமாகிய ஜனனி ரவிசங்கர் அவர்களின் நெறியாள்கையில் அந்த நடனம் சிறப்பாக படைக்கப்பெற்றது. அது பலரின் கண்களைக் கசிய வைத்த ஒரு அற்புதப் படைப்பாக விளங்கியது என்றால் அது மிகையாகாது.

1981ம் ஆண்டு வைகாசி மாதம் 31ஆம் திகதி இரவில், 12.30 மணியளவில் சிங்களக் கயவர்களால், எரியூட்டப்பட்ட எம் அறிவுக் களங்சியமான “யாழ் நூலகம்” எரிந்து சாம்பலானதை நாட்டிய நாடகமாக அரங்கேற்றினர் குருவும் ஏனைய மாணவிகளும் .

முதலில் யாழ்ப்பாண நூலக வாசலில் வந்து வரிசையில் காத்திருப்பவர்கள் நூலகம் திறக்கப்பட்ட போது காலணிகளைக் கழற்றி வைத்து விட்டு ஆலயத்துள் நுழைவது போல் நூலகத்தினுள் நுழைகின்றனர். தமக்கு வேண்டிய நூல்களை எடுத்துப் படிக்கின்றனர். வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

ஆனால். அன்றிரவே முகமூடியணிந்த தென்னிலங்கைக் காடையர்கள் வந்து அந்த நூலகத்துக்கு எரிகுண்டுகளை எறிந்து திக்கிரையாக்கி விடுகின்றனர். மறு நாள் நூலகம் எரிந்த செய்தி யாழ்ப்பாணம் எங்கும் பரவிட பொதுமக்களும் வாசகர்களும் அலறித் துடித்து மனம் ப பதைபதைத்து அலறி அழும் காட்சி பார்வையாளர்களை நெஞ்சுருகிக் கசிய வைத்தது. இதற்காக ஏற்ற கவிதை ஒன்றை உதயன் லோகேந்திரலிங்கம் அவர்கள் எழுதிக் கொடுக பின்னணி குரல் கொடுத்து, மருத்துவர் போல் ஜோசப் அவர்கள் வாசித்தளித்தார்.

அருமையான கவிதை.

அத்துடன் கூடவே அன்றைய நடன நிகழ்வில் நடந்த சிறந்த கல்விமானாகிய 30 மொழிகளில் புலமை கொண்ட தாவீது அடிகளாரின் மரணம் பற்றிய விவரணத்தையும் கூறினார் மருத்துவர்போல் ஜோசப் அவர்கள்.

இந்நடனத்தில். பங்கெடுத்த நடன மணிகள் சிறுவர்கள் என அனைவரும் திறமையாக தமது பங்களிப்பை அளித்திருந்தனர்.

செல்விகள் நிவேதிகா தீபன் வைசாலி சிறிதரலிங்கம் ரேனாராஜ் சந்திரிகா தியானா ரவிசங்கர் கிரினா ரவிசங்கர் ஜொய்ஸ்னா இந்துநாதன் பவிஸ்னா இரட்ணசிங்கம்- ரெய்னி வித்யா ஆகியோர் தங்கள் நாட்டிய அர்ப்பணத்திற்கான சான்றிதழ்களை மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களிடமிருந்து பெற்றனர்.

அத்துடன் கவிதை நேரம் ஒன்று நிகழ்த்தப்பட்டது.

அதனை தலைமை தாங்கி நடத்தியவர் ‘பாவலர்’ . க. குமரகுரு அவர்கள். இவருடன் கவிதாயினி உமா மோகன்- கவிஞர் வீணைமைந்தன் சண்முகராஜா- கவிஞர் மயிலைக்கவி- கவிஞர் சந்திரமோகன் ஆகியோர் வேறுபட்ட தலைப்புகளில்- தத்தமது கவிதைகளை சமர்ப்பணம் செய்தார்கள் .

அடுத்து தமிழ் சமூக மையம் மற்றும் மாநாட்டு மண்டபம் தமிழர்க்கு மிகவும் அவசியம் என்றும் ஜனவரி 31ஆம் திகதிநிதி சேகரிக்கும் முயற்சிக்கு இறுதி நாள் எனவும் ஸ் காபுறோ தமிழ்ச் சமூக மையத்தின் சார்பில் திரு கெங்காதரன் வினாயகமூர்த்தி வழகிய 10000 டாலர்கள் நிதியை பெற்றுக் கொள்வதற்காக வந்திருந்த சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள். தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் ஒவ்வொருவரும் 1000 டொலர்கள் கொடுங்கள் . 400 டொலர்கள் வரி மீள் பெறும் பற்றுச்சீட்டு கிடைக்கும் அல்லது ஒரு குடும்பமாக 10000 டொலர்கள் வழங்கினார் அதற்கான வரிமிளப்பெறும் பற்றுச்சீட்டு வரும் என்றார்.

இன்று தருகிறேன் என்று சொல்லுங்கள். பின்னர் தாருங்கள். அல்லது சிறிது சிறிதாக் கொடுங்கள் என்றார். சிந்திப்போம். எமது அடுத்தடுத்த தலைமுறைகள் எம்மைச் சிந்திப்பார்கள் என்றும் அவர் சபையோரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்து அன்றீனா கங்காதரன் ஜஸ்மிதா கங்காதரன் ஆகிய சகோதரிகள் பாடிய “மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு” பாடல் கேட்போரை மகிழவைத்தது.
பிரபல பாடகர் தனநாயகம் கனகரட்ணம் பாடிய “மருதமலை மாமணியே” பாடலும் சிறப்பாக இருந்தது.

அப்போது அவர் லோகேந்திரலிங்கம் அவர்களின் பெருந்தன்மை பற்றி ஒரு கருத்தைக் கூறினார். அதாவது, 2013ஆம் ஆண்டில் கனடாவின் தனது பல்சுவைக் கலைவிழாவிற்காக இவர் அழைத்த ஆச்சி மனோரமா அவர்களை தமது. நிறுவனத்து தொடக்கவிழாவுக்கு அழைத்த போது ஆச்சி மனோரமாவை இங்கு கொண்டு வர அதிக செலவு செய்ததிருப்பார் என்ற எண்ணத்தில் அதற்கென ஒரு தொகை பணத்தை தர வேண்டும் என்று தான் கேட்டபொழுது அதனை மறுத்ததுடன் நீங்கள் வளர்ந்தால் நாங்கள் வளர்ந்தது போன்றதே எனக் கூறியதை பெருமனதுடன் நினைவு கூர்ந்தார்.

அமைச்சர் றேமண்ட் சோ மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,திருவாளர்கள் லோகன் கணபதிP அரிஸ் பாபிகியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கூடவே வர்த்தகப் பெருமக்கள் அனைவருக்குமான பரிசில்களையும் வழங்கினார்கள். அவர்களுடன் சமூக சேவையாளர் சக்தி ஞானம்மா அவர்களும் மேடையில் அழைக்கப்பெற்று அவரும் பாராட்டுப் பத்திரங்களை வழங்கினார்.

நடன ஆசிரியை தனுஜா திருமாறன் அவர்களின் மாணவி அரியானா தனேந்திரனின் பரத நாட்டியம் அருமையாக இருந்தது.

பிரதம விருந்தினர் உரை இடம்பெற்ற பின்னர் . அமைச்சர் கரி ஆனந்தசங்கரிஅவர்களின் வாழ்த்துப் பத்திரம் வாசிக்கப்பெற்று உயிரவன் அவர்களுக்கு வழங்கப்பெற்றது. கூடவே ஒன்றாரியோ மாகாண அமைச்சர் றேமன் சா அவர்களும் உதயன் பத்திரிகையின் 30 ஆண்டு கால வளர்ச்சி பற்றிக் கூறி அனைவரையும் வாழ்த்தினார்.

அடுத்து சுயனித்தா சுயந்தன் மற்றும் சந்தோஸ் குகன்

ஆகியோர் இணைந்து பாடிய “தில்லான தில்லான” பாடல் சிறப்பாக இருந்தது.
வியானிகா அருணோதயனின் “சகலலக பேபி, லுக்கு விடத் தோணலியா” பாடலும் அருமை.
அடுத்துப் பாடிய சகானா இரங்கநாதனின் “நானே நானா யாரோ தானா” மிகவும் நன்றாக இருந்தது.

நிலா கிருஷ்ணசூரியனின் “விழிகளில் ஒரு வானவில்” பாடலும் அருமையாக இருந்தது.

மாலையில் யாரோ… பாடலைப் பாடிய … குரல் வளமும் நன்றாகவே இருந்தது. வாழ்த்துகள் அனைவர்க்கும் பாராட்டுக்கள். அத்துடன் ‘சன்சீ’ இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியில் பங்குபற்றி பாடக பாடகிகள் அனைவரும் சிறப்பான இசை நிகழ்ச்சியொன்றை வழங்கினார்கள்.
மொத்தத்தில் 29ஆம் ஆண்டு “உதயன் பல்சுவை நிகழ்வு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்திகழ்வைத் தொய்வின்றி நடத்திச் சென்ற …… தொகுப்பாளர்க்கும் வாழ்த்துக்கள்.

நிகழ்ச்சி விமர்சனம்:- புட்பா கிறிஸ்ரி – pushpachristy@gmail.com

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>