பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் நடைபெறுமென அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்

Share

தமிழகத்தில் பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் இருக்குமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களுக்கு உடற்கல்வி வகுப்பில் மாணவர்கள் விளையாடும் வகையில் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: பள்ளிகளில் இனிமேல் வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் நடைபெறும். உடற்கல்வி வகுப்புகளை தவிர்க்கக் கூடாது, புறக்கணிக்கக் கூடாது. மாணவ, மாணவர்கள் விளையாட ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகளில் விளையாட்டில்கூட சாதி, மதம் என எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே உடற்கல்வி வகுப்பு இருந்த நிலையில் 5 நாட்கள் வரும் வகையில் அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்புகளும், 11, 12-ம் வகுப்புகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகளும் கட்டாயமாக வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று முன்பு இருந்த வாரத்திற்கு 2 நாட்கள் என்ற முறையை

மாற்றி திருத்தியமைக்கப்பட்ட கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>