பழனி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர், பத்திர எழுத்தருக்கு ஒரு நாள் காவல்துறை காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது

Share

பழனி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர், பத்திர எழுத்தருக்கு ஒரு நாள் காவல்துறை காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான 1.35 ஏக்கர் நிலம் முறை கேடாக ரூ.2 கோடிக்கு தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் (48), விழுப்புரத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் (56), நிலம் வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளை த்துரை (60), பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி (67), வக்கீல் அன்வர்தீன் (65), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் (38) ஆகியோரை கைது செய்தனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பழனியைச் சேர்ந்த வக்கீல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தலை மறைவான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை கொடைக்கானலில் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் கொண்டு வந்தபோது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் தொடர் சிகிச்சையில் இருந்த ஜஸ்டின் மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்ப டும் ஜஸ்டின் மணிகண்டனிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை இன்னும் முழுமையான விசாரணை நடத்தவில்லை. அதே போல் பத்திர எழுத்தர் ஜெயபிரகாசிடமும் விசாரணை நடத்த முடிய வில்லை. இதன் காரணமாக அவர்கள் 2 பேரயும் காவல்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>