பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Share

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வருகிற 21-ம் தேதி நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக அவரை சந்தித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் விழாவுக்கு அழைப்பு விடுத்தனர். எம்.என்.ராஜம் 1950 முதல் 1960-ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தார். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்களும், அரங்கேற்றம் உள்ளிட்ட 200 படங்கள் நடித்திருக்கிறார்.

பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் சமீபத்தில் 90-வது பிறந்த நாளை கொண்டாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>