பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Share

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு புறம் ஆந்திர துணை முதல்வராக இருந்துகொண்டு மறுபுறம் படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘உஸ்தாத் பகத் சிங்’ என்ற படத்தில் பவன் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், `உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் பார்த்திபன், ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>