பஹாமஸ் விமான விபத்தில் 10 பேர் பலியாகினர்

Share

ஹாமஸ் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். பஹாமஸ் நாட்டின் நசாவ் நகரில் உள்ள லிண்டன் பிந்த்லிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக செஸ்னா 402 என்ற விமானம் ஒன்று புறப்பட்டு சான் ஆன்டிரோஸ் நகருக்கு சென்றது. அப்போது அந்த விமானம் திடீரென்று விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்களில் பலர் காயம் அடைந்தனர். எனினும், இந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இந்த சம்பவம் பற்றி பஹாமஸ் நாட்டின் பிரதமர் பிலிப் பிரேவ் டேவிஸ் கூறும்போது, விமான விபத்தில் ஒருவர் காயமடைந்து உள்ளார் என முதலில் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, அந்த நபரும் பலியாகி விட்டார் என கூறினார்.

நாட்டின் 53-வது சுதந்திர தின கொண்டாட்டம் நடந்து வரும் சூழலில் இந்த துயர விபத்து நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என்று டேவிஸ் கூறினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>