பாகிஸ்தானில் கனமழை: வெள்ளப்பெருக்கில் 124 பேர் உயிரிழப்பு

Share

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. எனவே கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 116 பேர் பலியாகி இருந்தனர். 150-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் 8 பேர் பலியாகினர். இதனால் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது. கனமழையால் வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>