பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் – பாதுகாப்புப்படையினர் மோதலில் 10 பேர் உயிரிழந்தனர்

Share

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் , பாதுகாப்புப்படையினர் இடையே நடந்த மோதலில் 10 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் கராச்சி நகரின் குலிஸ்தன் ஜஹர் பகுதியில் துணை ராணுவத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர். வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்தை துணை ராணுவ அலுவலகத்தின் நுழைவு வாயிலில் மோதி பயங்கரவாதிகள் வெடிக்கச்செய்தனர். இதையடுத்து, பாதுகாப்புப்படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிற்கும் இடையே சில மணிநேரம் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த மோதலில் 6 பயங்கரவாதிகள், 4 பாதுகாப்புப்படையினர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரி இ தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>