பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் – கேப்டன் உள்பட 6 வீரர்கள் உயிரிழப்பு

Share

பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய குர்ரம் பழங்குடியின மாவட்டத்தில் சுல்தானி பகுதியில் பாதுகாப்பு படையினரின் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வாகனத்தின் மீது தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பினர் துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து அவர்களை இலக்காக கொண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்க செய்யப்பட்டது. இதில் ராணுவ கேப்டன் ஒருவர் உள்பட 6 வீரர்கள் மரணம் அடைந்தனர். எனினும் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த மாத தொடக்த்தில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 துணை ராணுவ படையினர் மற்றும் 2 அதிகாரிகள் உயிரிழந்தனர். தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பினரே இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>