பாகிஸ்தானில் 24 எம்.பி.க்களின் கடப்பிதழ் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாண முதல்-அமைச்சர் முகமது சோஹைல் அப்ரிடி மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்களின் கடப்பிதழ்களை முடக்க இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள் மீதான தாக்குதல் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் இவர்கள் ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலனாய்வு அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அடுத்த உத்தரவு வரும் வரை இவர்களது கடப்பிதழ்களை முடக்குமாறு மத்திய புலனாய்வு முகமைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், பஞ்சாப் காவல்துறை தன்னை தாக்கியதாக முதல்-அமைச்சர் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார். வரும் 27-ந் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ள சூழலில் இந்த நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.