பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கி சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர்

Share

ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே அதிபர், பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், விலைவாசி உயர்வு, அரசியல் உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி அவாமி நடவடிக்கை குழு என்ற மனித உரிமைகள் அமைப்பு அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசுக்கு எதிராகவும், மின்சாரம், உணவுப்பொருளில் மானியம் உள்பட 38 கோரிக்கைகளை முன்வைத்து மனித உரிமை அமைப்பு போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றோர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவி வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>