பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் வெளிப்படையாக போர் பிரகடனம் செய்து ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் போர் அண்டை நாடான தங்களுக்கு கவலை அளிக்கிறது என சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாயோ நிங் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய நெருங்கிய அண்டை நாடுகள். மற்றும் சீனாவின் அண்டை நாடுகள். அண்டை நாடுகள் மற்றும் நண்பர்கள். தற்போதைய மோதல் போக்கு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மிகுந்த கவலை அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக சீனா எப்போதும் ஆதரவு அளிக்கிறது. இரண்டு நாடுகளும் அமைதியையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள் மூலம் அவர்களுடைய வேறுபாடு மற்றும் மோதல்களை முறையாக தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சேதங்களை தவிர்க்க போர் நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மயோ நிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதல் மிகவும் கவலை அளிக்கிறது – சீனா
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>