பாகிஸ்தான்: எரிவாயு உருளை வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து 16 பேர் உயிரிழப்பு

Share

பாகிஸ்தானின் தெற்கே சிந்த் மாகாணத்தில் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென எரிவாயு உருளை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதனையடுத்து காவல்துறை மற்றும் மீட்பு அதிகாரிகள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி ரிஸ்வான் பட்டேல் என்ற காவல்துறை அதிகாரி கூறும்போது, கட்டிட இடிபாடுகளை அகற்றி யாரேனும் உள்ளே சிக்கி இருக்கிறார்களா? என தேடும் பணி தொடர்ந்து வருகிறது என கூறினார். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கராச்சி நகரில் பல வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. அதன் உதவியுடன் சமையல் செய்யப்படுகிறது. எனினும், சில வீடுகளில் கியாஸ் சிலிண்டர்களும் உபயோகத்தில் உள்ளன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>