பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது – ஒருவர்தப்பி ஓட்டம்

Share

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த பொருட்களுக்கான பணத்தை செலுத்த முற்பட்ட சமயம் சந்தேகம் ஏற்பட நிலையில் விசாரணை செய்ய முற்பட்ட வேளை அவருடன் வருகைதந்த சக பாகிஸ்தான் பிரஜை ஓடியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரான பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் தான் பாகிஸ்தான் நாட்டில் இருந்து இலங்கை வந்ததாகவும் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தப்பி ஓடி பாகிஸ்தான் பிரஜை தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>