பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு சரத்குமார் நன்றி தெரிவித்தார்

Share

பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும், தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற சாதனையாளரும், இந்தியாவின் இணையற்ற “திரைக்கதை மன்னன்” அன்பு நண்பர் கே. பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடைபெற சிறப்பான ஏற்பாடுகளையும் அனுமதியையும் வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் விஜய் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த அமைச்சர் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், ஆரம்பம் முதல் இறுதிவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, மதிப்புமிக்க நிகழ்வாக நடத்திய தமிழ்நாடு காவல்துறையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>