பாக்யராஜ் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Share

பாக்யராஜ் உடலுக்கு முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை வள்ளுவர்கோட்டம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பாக்யராஜ் மனைவி பூர்ணிமா, மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் உடன் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  பாக்யராஜ் மறைவு குறித்து தகவல் அறிந்த உடன் இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை  மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ் அவர்கள். தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார் என்று கூறியிருந்தார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>