பாடசாலை மாணவர்களுக்கு சீனா சீருடைத் துணி – யாழ்ப்பாணத்தில் ஐனாதிபதி அநுர அறிவிப்பு !

Share

இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீன நாட்டிலிருந்து சீருடை துணி வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் பாசவூர் பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் அவிவிருத்தி செயற்பாடுகளுக்கு சீனா பல வழிகளிலும் உதவி செய்து வருகிறது.

அந்த வகையில் இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் 2025 ஆம் ஆண்டு சீருடை துணி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>