பால்கி இயக்கும் புதிய தமிழ் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தி நடிகையான வித்யா பாலன், தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருந்தார். இப்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் ஆர்.பால்கி இயக்கும் தமிழ்ப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பால்கியுடன் அவர் மீண்டும் இணைந்துள்ளார். இந்தியில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஆர் பால்கி. இவர் நடிகர் தனுஷை வைத்து ஹிந்தியில் ‘ஷமிதாப்’ படத்தை இயக்கியவர். பெரும்பாலும் நடிகர் அமிதாப் பச்சனை வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து ‘சீனி கம்’, ‘பா’ மற்றும் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். இது ஒரு பாடகியின் பயோபிக் என தகவல் வெளியாகியுள்ளது.
பால்கி இயக்கும் தமிழ் படத்தில் கதாநாயகியாக வித்யா பாலன் நடிக்கிறார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>