பா. ரஞ்சித் அரசியலுக்கு வருவார் – இயக்குனர் மாரி செல்வராஜ்

Share

மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.

தென்மாவட்டங்களில் நிலவிய சாதிய மோதல்கள் மற்றும் தீண்டாமையை மையமாக வைத்து கபடி வீரரின் கதையை மாரி செல்வராஜ் பைசன் படத்தில் பதிவு செய்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘பைசன்’ படத்தின் புரோமோசனின் போது பேசிய மாரி செல்வராஜிடம், ‘அரசியலுக்கு வருவீர்களா?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு மாரி செல்வராஜ், “என் வாழ்க்கையில் கலைதான் எனக்கு பெரிய போதை. பதற்றத்திலேயே இருப்பதால் மிக விரைவாக வேலை பார்க்கக்கூடிய ஆள் நான். நிறைய படங்களை எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இன்னும், 15 கதைகளையாவது திரைப்படமாக உருவாக்க விரும்புகிறேன். இயக்குநர் பா. இரஞ்சித் அரசியலுக்கு வருவார். அதற்கான முழு தகுதி உடையவர். அவர் எதற்கும் பயப்பட மாட்டார்; களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்; கண்டிப்பாகக் களத்தில் இறங்குவார்” எனத் தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>