பிட்டி தியாகராயர் பிறந்தநாள் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

Share

தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: நீதிக்கட்சியின் பெருமைக்குரிய தலைவர்களுள் ஒருவரான வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் இன்று. திராவிட மாடல் அரசின் சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். நீண்டகாலம் மாமன்ற உறுப்பினராகவும், பின்னர் மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றி இன்றைய சென்னையின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். ஏழை – எளிய மக்களின் உயர்வுக்காக தொண்டாற்றிய பிட்டி தியாகராயர் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்து இருக்கும். அவர் புகழ் ஓங்கட்டும்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>