சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தொடங்கி உள்ளது தேமுதிக. தேமுதிக சார்பில் விருப்ப மனுக்களை பெறும் முன் விஜயகாந்த் நினைவிடத்தில் வழிபாடு செய்தார் பிரேமலதா. அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் பணியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். விருப்ப மனுக்களை தொண்டர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் கட்சி அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தொண்டர்கள், மக்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து தேமுதிக வெற்றி பெறும். இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பு கூட்டணியை அறிவிப்போம். யூகங்களுக்கு நான் பதில் சொல்வது இல்லை என்றார். சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பிப்.17க்கு முன் அறிவிக்கிறது தேமுதிக. பொது தொகுதிக்கான விருப்ப மனு ரூ.15,000, தனித்தொகுதிக்கு ரூ.10,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிப்.17க்கு முன் கூட்டணியை அறிவிக்கிறது தேமுதிக
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>