‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் வங்காள தேச உள்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை. இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் முதலாவது மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பிராந்திய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேற்கண்ட நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. ஆனால் இதில் பங்கேற்காமல் தவிர்க்க வங்காளதேச உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது முடிவு செய்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் சுமுக மற்ற உறவுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த மாநாட்டில், மூத்த அதிகாரி மன்சூர் மோர்ஷெத் சவுத்ரி தலைமையிலான தூதுக்குழு வங்காளதேசம் சார்பில் பங்கேற்கிறது.
பிம்ஸ்டெக் மாநாட்டில் வங்காள தேச உள்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>