தமிழ் சினிமாவில் 90களில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். முதல் படமான ‘வைகாசி பொறந்தாச்சு’ சூப்பர் ஹிட். தொடர்ந்து அவர் நடித்த செம்பருத்தி, வண்ண வண்ண பூக்கள், வின்னர், ஜீன்ஸ், ஜோடி என பல வெற்றிபடங்களை கொடுத்தார். உச்சத்திலிருந்த அவரது மார்கெட் திடீரென இறங்கியது. தொடர் தோல்விகள், குடும்ப பிரச்சனைகளால் கேரியரில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். பல வருடமாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் பிரசாந்த் நடிப்பில், சமீபத்தில் ‘அந்தகன்’ என்ற படம் வெளியானது. அந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது நடிகர் பிரசாந்த் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். அந்தகன் படத்தைத் தொடர்ந்து இந்த படத்தையும் பிரசாந்தின் அப்பா தியாகராஜன்தான் இயக்குகிறார். இந்த படத்தில் தேவயானி மகள் பிரியங்கா மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் தெலுங்கில் ரூ.5 கோடி தயாரிப்பில் வெளியாகி ரூ.60 கோடி வரை வசூல் செய்து வரவேற்பை பெற்ற ‘கோர்ட்’ படத்தின் மறுபதிப்பாகும். நடிகர் பிரசாந்தின்பிறந்தநாளையொட்டி புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியானது. இந்த விழாவில், வெற்றிமாறன், கலைப்புலி எஸ். தாணு, கே.எஸ். ரவிகுமார், தேவயானி உள்ளிட்ட பல பிரபலங்கள் கொண்டு புதிய படத்தின் டைட்டிலை வெளிட்டுள்ளனர். அதன்படி, இந்த படத்திற்கு ‘ரஞ்சன் தி அட்வகேட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சாந்தி தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
பிரசாந் நடிக்கும் “ரஞ்சன்” படத்தில் சத்யராஜ்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>