விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ”எல்ஐகே'(லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 18-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘எல்ஐகே’ படத்தின் 2வது பாடல் ‘பட்டுமா’ வருகிற 27-ந்தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு பதாகை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக இப்படம் தொடர்பாக வெளியான முன்னோட்டம் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், 2-வது பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ படத்தின் 2வது பாடல் பதிவேற்றம்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>