பிரபாஸ் நடித்த ‘பெளசி’ படம் டிசம்பர் 3ம் தேதி வெளியாகிறது

Share

பிரபாஸ் நடித்த பெளசி திரைப்படம் பான் இந்தியா அளவில்  டிசம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளது.  ‘பெளசி’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரித்து வருகின்றனர். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தில், இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், மூத்த நடிகர்கள் மிதுன் சக்ரவர்த்தி, ஜெயபிரதா, சைத்ரா ஜே ஆச்சார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘பெளசி’ திரைப்படம் அதிரடி ஆக்சன் மற்றும் காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது. பிரபாஸின் மாறுபட்ட தோற்றமும், ஹனு ராகவபுடியின் உணர்வுப்பூர்வமான திரைக்கதையும் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘பெளசி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை நடிகர் பிரபாஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் ‘பெளசி’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காள மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>