இந்தியாவின் தலைநகரான டில்லியில் அடுத்த மாதம் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்தியாவில் இந்த மாநாட்டை நடத்துவது குறித்து பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த மாநாடு பிப்ரவரி 19-20 ஆகிய தேதிகளில் டில்லியில் நடைபெற உள்ளது. முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட்டை சந்தித்து பேசியபோது, பிரான்ஸ் அதிபரை வரவேற்க இந்தியா அவலுடன் காத்திருப்பதாக தெரிவித்திருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>