அமெரிக்காவின் முயற்சியால் காசா (ஹமாஸ்)- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த ஒரு குழுவை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அமைத்துள்ளார். துருக்கி, எகிப்து, அர்ஜென்டினா, இந்தோனேசியா, இத்தாலி, மொராக்கோ, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளின் தலைவர்களை இந்த அமைதி குழுவில் சேருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், காசா அமைதி வாரியத்தில் சேருவதற்கான டிரம்பின் அழைப்பை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகினது. இதனையடுத்து அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் மறுத்தால், 200% வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டியுள்ளார். பிரான்ஸ் தயாரிப்பு மதுபானங்கள் மீது 200% வரி விதித்தால், அதிபர் மேக்ரான் வாரியத்தில் சேர்ந்துவிடுவார் என டிரம்ப் பேசியுள்ளார்.
பிரான்ஸ் மீது 200% வரி விதிப்பேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>