பிரித்விராஜின் “கலிபா” படம் ரூ.50 கோடி வசூலித்துள்ளது

Share

பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘கலிபா’ திரைப்படம் 2 வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்துள்ளது. நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான புதிய ஆக்சன் திரைப்படமான ‘கலிபா’ ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டர்போ திரைப்படத்தை இயக்கிய வைசாக் இப்படத்தை இயக்கியுள்ளார். அவருடன் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். ஜினு ஆபிரகாம் இதற்கு முன்பு பிருத்விராஜ் நடித்த ‘ஆடம் ஜோன்’, ‘கடுவா’ உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார். பழிவாங்கும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘கலிபா’ திரைப்படம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி லண்டனில் தொடங்கிய ‘கலிபா’ படத்தின் படப்பிடிப்பு, லண்டன், துபாய், நேபாளம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.  இந்நிலையில், பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘கலிபா’ படம் 2 வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>