பிரேசிலில் பேருந்து -லோரி மோதி கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பரானா மாகாணம் லிபிடுவா நகரில் இருந்து பண்டா கிராசா நகருக்கு அதிகாலை பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 28 பேர் பயணித்தனர். பரானா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் எதிரே வந்த லோரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>