தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பரானா மாகாணத்தை நேற்று இரவு சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் , கனமழையும் பெய்ததால் பல பகுதிகளில் கட்டிடங்களில் மேற்கூரைகள், விளம்பர பலகைகள் சேதமடைந்தன. சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பிரேசிலை தாக்கிய சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 432 பேர் காயமடைந்தனர். மீட்புப்பணிகள் காவல்துறை, தீயணைப்புத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>