பிரேசில் அக்டோபர் 25ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது

Share

பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் அக்டோபர் 25ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் அதிபராக லுலா டி சில்வா செயல்பட்டு வருகிறார். இதனிடையே, பிரேசில் நாட்டில் கடந்த 4ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டி சில்வா, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவின் மகன் பிளவியோ நண்டெஸ் போல்சனேரோ உள்பட 12 வேட்பாளர்கள் களமிறங்கினர். அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேட்பாளர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறவேண்டும். எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்குமேல் வாக்குகளை பெறாத பட்சத்தில் அதிக வாக்குகளை பெறும் முதல் 2 வேட்பாளர்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும். அதன்படி, கடந்த 5ம் தேதி நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போதைய அதிபர் லுலா டி சில்வா 45.16 சதவீதம், பிளவியோ நண்டெஸ் போல்சனேரோ 47.03 சதவீதம் வாக்குகளை பெற்றனர். இதையடுத்து, பிரேசிலில் மீண்டும் அதிபர் தேர்தல் (2ம் கட்டம்) நடைபெற உள்ளது. இதில் லுலா டி சில்வா மற்றும் பிளவியோ நண்டெஸ் போல்சனேரோ ஆகிய இருவரும் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். அக்டோபர் 25ம் தேதி நடைபெறும் இந்த தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் பிரேசில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>