பிலிப்பைன்சின் தெற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் டாவோ ஆக்சிடென்டல் மாகாணத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவானது. 101 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>