பீகார் சட்டசபை தேர்தல்: இந்தியா கூட்டணியின் முதல் – அமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு

Share

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி-காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஜே.எம்.எம். இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ்- ஆர்ஜேடி தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்- ஆர்ஜேடி இடையிலான சர்ச்சைகளுக்கு மத்தியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி முதல்-அமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>